Homeபிற செய்திகள்நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை: தர்மபுரி பள்ளி மாணவருக்கு கார் பரிசு

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை: தர்மபுரி பள்ளி மாணவருக்கு கார் பரிசு

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவன் சர்வேஷ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பரிசாக கார் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி என்னும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையம் தொடங்கப் பட்ட முதல் ஆண்டிலேயே நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் வெற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர் சி.பி. சர்வேஷ் 720-க்கு 635 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பயிற்சி மையத்தில் படித்த 9 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப் பில் சேர தகுதி பெற்றுள்ளனர். 5 பேர் தலைசிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற் றுள்ளனர். இந்த மையத்தில் தேர்வு எழுதிய 90 பேரில் 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் 98.35 சதவீதமும், வேதியலில் 99.3 சதவீதமும், உயிரியலில் 99.87 சதவீத மும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சர்வேஷு-க்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கி பாராட்டினார்.

வெற்றி பெற்ற நரேஷ், தனிஷ், தர்ஷனர், அமுதினி ஆகிய மாணவர் களுக்கும் அவர் பரிசு வழங்கினார்.

பள்ளித் தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், முதன்மை செயல் அலுவலர் சந்திர பானு, விஜய்ஸ் ஏஸ் அகாடமி தலைவர் கல்யாண் பாபு, விஜய் வித்யாலயா பள்ளி முதல்வர்கள் நாராயண மூர்த்தி, பத்மா, விஜய் மில்லினியம் பள்ளி முதன்மை முதல்வர் துரைராஜ், பள்ளி முதல்வர்கள் ஷீபா, ஜோதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.

பள்ளித் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் கூறுகையில், விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் படிக்கும் 350 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

20 வருட அனுபவம் வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img