விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை வட்டம், பாலவநத்தம் தொ டக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தமிழக அரசின் பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பயனாளிகளுக்கு தள்ளுபடி தொடர்பான சான்றிதழ் வழங்கினார்.
மண்டல இணைப்பதிவாளர் பா. செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ப்பி. இராஜலெட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப் பதிவாளர் அ.ஜெயமணி, இணைப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் டேனியல் ராஜா வாட்சன், கண்காணிப்பாளர் பெரியசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ஆர்.இராமகிருஷ்ணன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் சிரில் சுபாஸ், எஸ். காந்திராஜூ, ராஜ்குமார், கூடலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



