கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், “மை க்ரோஜோ டாட் காம்”, எனும் உணவு விநியோகம் செய்யும் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது.
ரஞ்சனா சிங்ஹால் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமங்களின் தலைவர் சீனிவாசன் செயலியை அறிமுகம் செய்தார்.
முதல் விற்பனையை க்வாட்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீ பிரசாந்த் சுப்ரமணியன் பெற்று கொண்டார். பின்னர் செய்தியாளர் களிடம் மை க்ரோஜோ செயலியின் நிர்வாக இயக்குநர், மனோஜ் கூறியதாவது:
இந்த செயலியில் உணவு விநியோகம் செய்யும் வகையில் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். கடந்த ஓர் ஆண்டாக கோவை மாநகரை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர் தொலைவிலான வாடிக்கையாளர்களுக்கு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளை, 60 நிமிடங்களில் கிடைக்கும் வகையில் வழங்கி வருகிறோம்.
தற்போது 100-க்கும் மேற்பட்ட உணவகங்கள் இதில் இணைந்துள்ளன. கடந்த ஒரு வருடத்தில் 3200, தொடர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
உணவு விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் வழிமுறைகள், சாலையில் வாகனம் இயக்கும் முறைகளை தெளிவாக பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் பின்னரே, அவர்களுக்கு பணி வழங்குகிறோம்.
நிறுவனத்தின், நற்பெயரை மீட்டெடுக்கும் வகையில் பணியாளர்கள் பணி யாற்றுவார்கள் என்றார்.