fbpx
Homeபிற செய்திகள்தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்

தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, ‘தேசிய சேவை திட்டம்’ மற்றும் ‘உன்னத் பாரத் அபியான்’ ஆகியவை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் சென்ட்ரல், ஐ.வி.ஆர்.சி.எல், மற்றும் ‘உயிர் கிளப்’ இணைந்து ‘சதக் சுரக்ஷா’ என்ற கருப்பொருளின் கீழ், ‘தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்’ நடத்த ஏற்பாடு செய்தன.

கணியூர் சுங்கச்சாவடியில் ‘ஜீவன் ரக்ஷா’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஆண்டிகிளேர் ஸ்டிக்கர் ஒட்டுதல் மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img