தெற்கு ரயில்வேயின் புதிய பொது மேலாள ராக ஆர்.என்.சிங் திங்கட் கிழமை கடந்த 7ம் தேதி அன்று பதவி ஏற்றார். இவர் இந்திய ரயில்வே பொறியாளர் சேவை 1986 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர்.
இவர் இந்திய ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் நிர்வாக மற்றும் மேலாண்மை பதவிகளான டெல்லி கோட்ட ரயில்வே மேலாளர், இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்துக்கு அர்ப்பணிக்கப்படும் ரயில் பாதை நிறுவன நிர்வாக இயக்குனர் ஆகிய பதவி களை வகித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளராக நியமிக்கப் படுவதற்கு முன்பு, இவர் ரயில்வே வாரியச் செயலாளர் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானத்துறை முதன் மை நிர்வாக இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார்.
சரக்கு போக்குவரத் துக்கு தனி ரயில் பாதை திட்டம், பெரிய பாலங்கள், அதிவேக விரைவு ரயில் போக்கு வரத்து போன்ற பெரிய ரயில்வே திட்டங்களை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பேரனுபவம் வாய்ந்தவர்.
கடந்த 34 ஆண்டுகளில் ரயில்வே பணிகளில் பல்வேறு மேலாண்மை பொறுப்புகளை வகித்தவர். திட்ட மேலாண்மை ரயில் போக்குவரத்து, பொது மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்கள், முன் திட்ட ஏற்பாடுகள் ஆகியவற்றில் பல்வேறு முத்திரைகளை பதித்துள்ளார்.
இவர் ஹரித்வார் அருகே உள்ள ரூர்கீ இந்திய தொழில் நுட்ப நிலைய பழைய மாணவர். ஹாலந்தில் விபத்து மேலாண்மை, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சிறப்பு மேலாண்மை, பாரிஸில் முன் திட்ட மேலாண்மை, ஆஸ்திரியாவில் இயந்திரவியல் மேலாண்மை, இத்தாலியில் நிர்வாக மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்.