கோவையில் நேற்று தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை நிறுவனங்கள் இணைந்து, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நிர்வாகத்தினர் மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.



