திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதி களில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். மேலும், அங்கு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2,வார்டு 19, மும்மூர்த்தி நகர், கருப்பராயன் கோவில் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களை அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தர விட்டார்.



