fbpx
Homeபிற செய்திகள்திருத்தணி விழாவில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: மகளிர் குழுக்களுக்கு ரூ.2750 கோடி கடன்

திருத்தணி விழாவில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: மகளிர் குழுக்களுக்கு ரூ.2750 கோடி கடன்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பி லான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை திருத்தணியில் நடந்த விழாவில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிர் சுயஉதவி குழுக்க ளின் மேம்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் இதுவரை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழு வதும் ஒவ்வொரு மாவட்டத்தி லும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல்நிதி வழங்கும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பட்டா பிராமபுரம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி. என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் வர வழைக்கப்பட்டு அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருத்தணி சென்றிருந்தார். அவரை அமைச்சர்கள் பெரிய கருப் பன், ஆவடி சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வரவேற்றனர்.

அதன்பிறகு விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சுய உதவிக்குழுவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த விழாவில் 1,730 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப் பிலான வங்கிக் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவி களை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்கினார்.

சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் சுய உதவிக்குழுவில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து முதல் வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52 ஆயிரத்து 574 மகளிர் சுய உதவிக் குழுக் களைச் சேர்ந்த 6 லட்சத்து 83 ஆயிரத்து 462 பயனாளிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.2,485.96 கோடி வங்கிக் கடன் மற்றும் 30 இ-சேவை மையங்கள் தொடங்குவதற்காக 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய தொழில் தொடங்க தொழிற்கடனாக நகர்ப்புறத்தைச் சேர்ந்த 931 குழுக்களுக்கு ரு.26.60 கோடி, 1,381 தனி நபர்களுக்கு ரு.16.09 கோடி, 4,702 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 57,451 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட வங்கி கடனாக ரூ.219.37 கோடியும் வழங்கப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில் திறன், அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப் பினை பெற்றுத்தர முதல் கட்டமாக 69 சமுதாயத் திறன் பள்ளிகள் தொடங்க ரூ.66 லட்சம் வழங்கப்பட்டது.

உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளும், வருமானத்தை பெருக்கிடும் பயிற்சிகளும் வழங்க 37 சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்க ரூ.26 லட்சம், உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்க தொடக்க நிதியாக 90 குழுக்களுக்கு ரூ.68 லட்சம் மற்றும் தொழிற் குழுக்களுக்கான தொடக்க நிதியாக 37 குழுக்களுக்கு ரூ.26 லட்சமும் வழங்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: யாரையும் நம்பியிருக்காமல் தன் னம்பிக்கையுடன் செயல் படுவதே மகளிர் சுயஉதவி குழுக்களின் நோக்கமாக உள்ளது.

இத்தகைய மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்த ளம் அமைக்கும் விதமாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் ஆட்சி யில்தான். மகளிர் சுய உதவி குழுக்களுக்காக திமுக அரசு பல்வேறு உத விகளை செய்து வருகிறது.

அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக் குழு வுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், அத்துறைக்கு அமுதா அவர்களை செயலாளராக நியமித்தேன்.
தருமபுரி ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய அவர், மகளிர் பயன்பெறும் வகையில் பொறுப்பை சிறப்பாக எடுத்துச் செல்வார்.

அதனால், இனி மகளிர் சுயஉதவி குழுக்களின் நிலை பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் இந்த விழா திருத்தணியில் மட்டும் அல்லாது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி,இன்று 58,453 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7,56,142 பேருக்கு மொத்தம் ரூ.2,749.85 கோடி கடனு தவி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் மகளிர் சுயஉதவி குழுக் களுக்கு ரூ.20,000 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,இந்த மாத இறுதிக்குள் ரூ.1000 கோடி கடனுதவி வழங்கப்படும். இது எனது ஆட்சியல்ல,நமது ஆட்சி.அதன்படி,நமது ஆட்சியில் நலத்திட்ட பணிகள் தொடரும்”, என்று தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை போலவே தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப் பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img