fbpx
Homeபிற செய்திகள்தியாகி ஒண்டிவீரன் நினைவு நாள் அனுஷ்டிப்பு

தியாகி ஒண்டிவீரன் நினைவு நாள் அனுஷ்டிப்பு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி ஒண்டிவீரனின் 250வது நினைவு தினம், தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக, அதன் நிறுவனத் தலைவர் ஏ.மருதாசலம் தலைமையில் நடந்தது.

திராவிட சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பருவாய் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் எம்.பி. எம் தியாகராஜன், மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமார் (பிரதம மந்திரி கிராம மேம்பாட்டு திட்டம் தமிழக அரசு), தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ. கருப்புசாமி, ஒண்டிப்புதூர் ஆறு முகம், விடுதலை சிறுத்தை கட்சியின் வினோத், ஏ. சந்திரன் (தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்) உள்ளிட்டோர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு முகக் கவசம், உணவு பாடப் புத்தகங்கள், துணிமணிகள் போன்ற பொருட்களை இலவசமாக வழங்கினர். கோவை சபரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img