திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி நிர்வாக துறையின் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தாராபுரம் நகராட்சியில் இயற்கை இடர்பாடுகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளால் சேதமடைந்த தார் சாலைகளை நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2020-21இன் கீழ் ரூ.200.00 லட்சம் மதிப்பீட்டில் 4.040 கி.மீ சாலைகள் மேம்படுத்தும் பணிகள் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் 2020-2021ன் கீழ் ரூ.143.00 லட்சம் மதிப்பீட்டில் 2.180 கி.மீ நீளமுள்ள மண் சாலைகளை தார்சாலைகளாக மாற்றும் பணி எடுக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் நகராட்சியில் சிறப்பு சாலைத் திட்டம் 2020-2021 ன் கீழ் ரூ.500.00 லட்சம் மதிப்பீட்டில் 6.795 கி.மீ நீளமுள்ள தார்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் எடுக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சியில் 15வது மத்திய நிதிக் குழு திட்டம் 2020-2021ன் கீழ் 3 குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 திடக்கழிவு மேலாண்மை பணிகள் ரூ.51.75 லட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022ன் கீழ் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பூங்காவினை மேம்படுத்தும் பணிக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022ன் கீழ் ரூ.225.90 லட்சம் மதிப்பீட்டில்3.599 கி.மீ நீளமுள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 இன் கீழ் ரூ.35.10 லட்சம் மதிப்பீட்டில் 0.595 கி.மீ நீளமுள்ள மண் சாலைகளை பேவர் பிளாக் சாலைகளாக மாற்றும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 இன் கீழ் ரூ.11.60 லட்சம் மதிப்பீட்டில் 0.376 கி.மீ நீளத்தில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022ன் கீழ் ரூ.228.00 லட்சம் மதிப்பீட்டில் 5.336 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம் 2021-2022ன் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் 2 நகராட்சி பூங்காவினை மேம்படுத்தும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி திட்டப்பிரேரனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முகுறு 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.108.00 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்கு வசதி இல்லாத மற்றும் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு புதிய எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி பதிவேடுகள், நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்குதல் மற்றும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி முகாம் தொடர்பான பணிகள் குறித்த ஆவணங்கள் ஆய்வு செய்தார்.
வருவாய் மற்றும் செலவினங்கள், வரி வசூல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் மேலும், பொது மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு இருப்பில் உள்ள மழைநீர் கட்டமைப்பு முன்வைப்புத் தொகையினை கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மழைநீர் கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் ஆய்வு செய்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், தாராபுரம் நகராட்சி பொறியாளர் ராமசாமி, செய்தியாளர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருப்பூர் மாவட்டம்.



