கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சத்தி சாலையில் உள்ள சோ தனைச் சாவடியில் பொதுமக்களுக்கு தலைக் கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சரவணம்பட்டி காவல் நிலையம் லயன்ஸ் கிளப்ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிட்டன் மற்றும் விஜய் என்டர் பிரைசஸ் இணைந்து இருசக்கர வாகன ஓட்டி களுக்கு தலைக்கவச விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சிங்காநல்லூர் உதவி ஆணையாளர் அருண் தலைக்கவசத்தை வழங்கினார்
இந்நிகழ்வில் சரவணம் பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோயமுத்தூர் மெட் ரோபாலிடன் சேர்ந்த ஆளுநர் குப்பு சாமி ஜான் பீட்டர் மோகன் குமார் மற்றும் விஜய் என்டர் பிரைசஸ் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்



