தமிழகம் முழுவதும் உள்ள மீன் சந்தை , மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் மீன்கள் தரம் கண்டறியவும் மீன்கள் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க பாரமலின் எனும் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்யவும் கண்டறியப் பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் உத்தர விட்டுள்ளது.
அதன் பேரில் தர்மபுரி மாவட்டத்திலும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையும் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து இன்று தர்மபுரியில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் சந்தை பேட்டை பகுதியில் உள்ள மீன் விற் பனை மார்க்கெட் மற்றும் பென்னாகரம் ரோடு மீன் விற் பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஏ.பானுசுஜாதா மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் சி. சுப்பிர மணியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமிஉடன் மீன் வளத்துறை ஆய்வாளர் அசினாபானு உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்கள் மற்றும் ஐஸ் பெட்டிகளில் இருந்த மீன்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு சோதனை ஆய்வு நடத்தினார்.
4-க்கும் மேற்பட்ட வெவ்வேறு ரக மீன்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்ம லின் எனும் ரசாயனம் தெளிக்கப்பட்டிருக் கவில்லை என கண்டறி யப்பட்டது. ஆனால் ஒரு சில கடைக ளிலிருந்து மட்டும் தரம் குறைவான தகுதியற்ற கெட்டு போன மீன்கள் சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அங் கேயே பெனாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ15,000 இருக்கும்.
மேலும் கெட்டுபொன தரம் குறைவான மீன்களை விற்பனை செய்தது மற்றும் உணவு பாதுகாப்பு தர நடைமுறைகள் பின்பற்றாத 5கடைகளுக்கு உடனடி அப ராதம் முறையே 1000, 2000, 5000என மொத்தம் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது.
முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாத ஒரு விற்பனை நிலையத்திற்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட் டது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுதும் இருதுறையும் இணைந்து மேற்கொள்ளும் என தெரிவித்தனர்.



