Homeபிற செய்திகள்தர்மபுரியில் டேக்-வாண்டோ போட்டி

தர்மபுரியில் டேக்-வாண்டோ போட்டி

தர்மபுரி மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில், டேக் வாண்டோ போட்டி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 53 பள்ளிகளில் இருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாக்ரடீஸ் மேற்பார்வையில் இப்போட்டிகள் நடந்தன. சிறப்பு விருந்தினர் சப்தகிரி கல்லூரி தாளாளர் எம்.ஜி.சேகர் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட உடற்கல்வி அலுவலர் முத்துக்குமார் மாவட்ட அலுவலர் சாந்தி ஆகியோர் போட்டிகளை வழி நடத்தினர் உடற் கல்வி இயக்குனர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள், பார்வையாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img