Homeபிற செய்திகள்தர்மபுரியில் எலும்பு உறுதி பரிசோதனை முகாம்- நகரமன்ற தலைவர் துவக்கி வைத்தார்

தர்மபுரியில் எலும்பு உறுதி பரிசோதனை முகாம்- நகரமன்ற தலைவர் துவக்கி வைத்தார்

வேதா பிசியோதெரபி மற் றும் உடற்பயிற்சி நிலையம் சார் பாக தர்மபுரி கெய்ன் சாப்டர் (dharmapuri gain chapter) இணைந்து நடத்திய இலவச எலும்பு உறுதி பரிசோதனை மற்றும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனைகள் இலவச முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு எலும்பு உறுதி பரி சோதனை மற்றும் அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை மருத்து வரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை தர்மபுரி நகர மன்ற தலைவர் திருமதி லக்ஷ்மி நாட்டான் மாது அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

மேலும் தர்மபுரி கெய்ன் சாப்டர் சார்பாக ஹெல்த்கேர் ரத்தப் பரிசோதனை நிலையம் ராஜா வஜிரம், ராதாஸ்டோர்ஸ் பிரதீப் குமார், விஜிஸ் விஜய், சதீஸ், பிரியா பாலமுருகன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முகாமில் கலந்து கொண்ட அனை வருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி உடற்பயிற்சிகளை மருத்துவர் மணிமாறன் பயிற்றுவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img