Homeபிற செய்திகள்தமிழ்நாட்டிலேயே முதலாவதாக ஹெலிபேட் உள்ளிட்ட உலகத்தர வசதிகளுடன் பிரமாண்ட ஸ்மார்ட் சிட்டியை கோவையில் உருவாக்கும் ஜி...

தமிழ்நாட்டிலேயே முதலாவதாக ஹெலிபேட் உள்ளிட்ட உலகத்தர வசதிகளுடன் பிரமாண்ட ஸ்மார்ட் சிட்டியை கோவையில் உருவாக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனம்

தமிழ்நாட்டின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான ஜி ஸ்கொயர், இந்நாட்டில் இவ் வகையினத்தில் தனித்துவமான அம் சங்களுடன் தமிழ்நாட்டின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை இன்று கோயம்புத்தூரில் தொடங்கியிருக்கிறது.

கோவை எல் அண்ட் டி பைபாஸ் என்று அழைக்கப்படுகிற சேலம் &- கொச்சி நெடுஞ்சாலையையொட்டி, திருச்சி சாலை சந்திப்பிலிருந்து 3 நிமிட தூரத்தில் அமைந்திருக்கும் ஜி ஸ்கொயர் சிட்டி என்ற தனது சமீபத்திய செயல்திட்டத்தின் இந்த சிறப்பான அறிமுகத்தின் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டியை ஜி ஸ்கொயர் செயல்ப டுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவே முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டியாக இருக்கும்.

120.7 ஏக்கர் என்ற மாபெரும் நிலப்பரப்பில் 1663 வில்லா மனைக ளையும் மற்றும் 26 வர்த்தக பயன்பாட்டு மனைகளையும் உள் ளடக்கிய செயல்திட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உலகத்தர அம்சங்கள் இடம்பெறுகின்றன.

கோவையில் இதற்கு முன்பு ஒருபோதும் வழங்கப்படாத சிறப்பம்சங்களுள் ஒரு ஹெலிபேட் மற்றும் 50000 சதுர அடி பரப்பளவுள்ள சொகுசான கிளப் ஹவுஸ் ஆகியவையும் முதன்முறையாக இடம்பெறுகின்றன.

குடியிருப்புகளுக்கான எலிட் மனைகள் ஒரு சென்ட்டுக்கு ரூ.8.5 லட்சம் மற்றும் ப்ரீமியம் மனைகள் ரூ.9.5 லட்சம் என முதலில் வாங்குபவர்களுக்கான சிறப்பு சலுகை விலையாக நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது.

குடியிருப்பு மனைகளின் விலை ரூ.28 லட்சத்திலிருந்தும், வர்த்தகப் பயன்பாட்டிற்கான மனைகளின் விலை ரூ.2 கோடியிலிருந்தும் ஆரம்பமாகின்றன.
இந்த வளாகத்திற்குள் கல்விக்கூடம், மருத்துவமனை, வங்கி, மால், கன்வீனியன்ஸ் ஸ்டோர் ஆகிய உட்பட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டியாக ஜி ஸ்கொயர் சிட்டி திகழும்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், உட்கட்டமைப்பு மேம்பாட்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு ஸ்மார்ட் கம்யூனிட்டி செயல்திட்டமாக முன் னிலைப்படுத்தப்படும் இது, ஒரு ஹெலிபேட், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வழங்கும் தீர்வுகள், தானியக்க செயல்பாடாக வாகன பதிவு எண் அடையாளம் காணல் வசதி, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் அமைவிடம், ஸ்மார்ட் பைக் ரேக்ஸ், அவசரநிலை உதவி முனைகள் மற்றும் வைஃபை மண்டல பகுதிகள் ஆகியவை உட்பட மிக நேர்த்தியான, நவீன வசதிகள் பலவற்றையும் வழங்கும்.

எதிர்காலத்திற்குரிய அம்சங்கள் கொண்ட இச்செயல்திட்டத்தில் கண்காணிப்பு செயலிகள், ஊடுருவல் செயல்பாட்டை கண்டறியும் தொழில் நுட்பம், முக அடையாளம் மூலம் வருகைப்பதிவு அமைப்புகள் போன்ற மிக சமீபத்திய, நவீன தொழில்நுட்ப மேம்பாட்டு அம்சங்களும், மின்சாரம், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை கண்காணிக்கும் IoTஅடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்பும் இத்திட் டத்தில் இடம்பெறுவது இதன் மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும்.

இந்நாட்டில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள மல்ட்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவிற்கு மிக நெருக்கமாக ஜி ஸ்கொயர் சிட்டி அமையவிருக்கிறது.

உத்தேசிக்கப்பட்டுள்ள கோவை விமான நிலைய விரிவாக்க அமைவிடம், கோவை எல் அண்ட் டி பைபாஸை எட்டுவழி சாலையாக மாற்றும் வரைவுத்திட்டம், பாதுகாப்பு தொழிலகங்களுக்கான வழித்தடம் ஆகிய அனைத்தும் ஜி ஸ்கொயர் ஸ்மார்ட் சிட்டிக்கு அருகில் அமைந்திருக்கின்றன.

மிக வேகமாக நிலமதிப்பு உயர்ந்து வரும் இப்பகுதியில் இதற்கு முன்பு கிடைத்திடாத அற்புதமான வசதிகளுடன் இத்திட்டம் உருவாக்கப்படுவது இதன் சிறப்பை இன்னும் உயர்த்துகிறது.

இத்திட்டம் குறித்து ஜி ஸ்கொயர் – ன் தலைமை செயல் அலுவலர் என். ஈஸ்வர் கூறியதாவது: “ஜி ஸ்கொயர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வழியாக இம்மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட்சிட்டியை நிறுவுவது எங்க ளுக்கு ஒரு பெரிய மற்றும் முக்கிய மைல்கல்லாகும்.

முக்கியமான அமைவிட அணுகுவசதி, சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம், இதற்கு முன்பு ஒருபோதும் கிடைக்கப்பெறாத சிறப்பான வாழ்க் கைமுறையை குடியிருப்பாளர்கள் அனுபவிப்பதற்கான ஸ்மார்ட்சிட்டி அம்சங்கள் போன்ற பல்வேறு விஷ யங்களை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் இச்செயல்திட்டத்தை ஜி ஸ்கொயர் உருவாக்கியிருக்கிறது.

இதன் அமைவிடச் சிறப்பு பற்றி பேசுவதென்றால், அதிவேகமாக வளர்ச்சி பெற்று வரும் அடுத்த பெரிய மண்டலமாக கோவை எல் அண்ட் டி பைபாஸ் இருக்கிறது. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மல்ட்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா மற்றும் பாதுகாப்பு தொழிலகங்களுக்கான வழித்தடம் உட்பட, நம் நாட்டின் மிக நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியில் திறன்பெற்ற அமைவிடப் பகுதிகளுக்கு அருகே இப்பிராந்தியம் அமைந்திருக்கிறது.

மிக நேர்த்தியான உட்கட்டமைப்பு வசதியுடன் தமிழ்நாட்டில் மிகப் பொலிவான மற்றும் மிகப்பெரிய சமூக மனைப்பிரிவு செயல்திட்டமாக இது அமையும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

சுயசார்பு வாழ்வாதாரத்திற்கான இதன் செயற்பரப்பின் காரணமாக, ஜி ஸ்கொயர் சிட்டி என்ற பெயர் இந்த புராஜெக்டிற்கு சூட்டப்பட்டிருக்கிறது. ஒரு பள்ளி, உணவகங்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கான விற்பனையகங்கள், போக்குவரத்து வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என எண்ணற்ற வசதிகளை உள்ளடக்கியதாக ஜி ஸ்கொயர் சிட்டி இருக்கும்.

இனிவரும் காலங்களில் இவைபோன்ற இன்னும் அதிக அம்சங்கள் இதில் இடம்பெறும். சுருக்கமாக சொல்வதென்றால், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய சுயசார்புள்ள தனி உலகமாகவே ஜி ஸ்கொயர் சிட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் ஸ்மார்ட் சிட்டி செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக கோவை மாநகரம் இடம்ª பற்றிருக்கிறது.

உள்ளூர் பகுதிகளின் மேம்பாட்டை ஏதுவாக்குவது, தொழில் நுட்பத்தை, குறிப்பாக சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கின்ற தொழில் நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்ப டுத்துவதும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பது என்பதே ஸ்மார்ட் சிட்டி மிஷன் என்ற திட்டத்தின் நோக்கமாகும்.

அதிக விவரங்களுக்கு www.gsquarehousing.com என்ற இணைய முகவரியில் காணலாம்.

படிக்க வேண்டும்

spot_img