தமிழகத்தில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் தங்களது விவசாய பணிக ளை துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு தமிழகத்திற்கு நவம்பர் மாதத்திற்கென ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 720 டன் உரங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது, இதுவரை 25,200 டன் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள உர நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் உர நிறுவனத்தின் மூலமாக 45 ஆயிரம் டன் உரங்கள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஸ்பிக் நிறுவனத்தில் நடைபெற்று வரும் உற்பத்தி பணியை தமிழ்நாடு வேளாண்மை துறை உரங்கள் விநியோகத்திற்கான இணை இயக்குனர் கே. மணி நேற்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவை யான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 82,000 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளது. மேலும், மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்க £க, இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது
எனவே, பெரு நிறுவனங்களில் வேப்பம் புண்ணாக்கு மற்றும் குப்பை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேற்கண்டவாறு கூறினார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனி வேலாயுதம், வேளாண்மை அலுவலர் கார்த்திகா, ஸ்பிக் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாலு, வீநியோக பிரிவு சீனியர் மேலாளர்கள் ராஜேந்திரன், அடைக்கலம், விநியோக பிரிவு அலுவலர் அல்லிராஜ், தர கட்டுப்பாடு மேலாளர் பாலச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் அம்ரிதா கௌரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்