fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தில் கடந்த ஆண்டு 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை - உயர் அதிகாரி தகவல்

தமிழகத்தில் கடந்த ஆண்டு 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை – உயர் அதிகாரி தகவல்

தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு துறை கூடுதல் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் களுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் வினீத் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சிக்குத் தலைமை வகித்து திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக பணியில் சேர்ந்த 37 கால்நடை உதவி மருத் துவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் பேசியதாவது:

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன் மையான துறையாகும்.

இதில், 0.95 கோடி பசு வினங்கள், 5 லட்சம் எருமை யினங்கள், 1.43 கோடி செம்மறி, வெள்ளாட்டு இனங்கள், 12.07 கோடி கோழியினங்களுக்கு, 840 கால்நடை கிளை நிலையங்கள், 2,741 கால் நடை மருந்தகங்கள், 152 கால்நடை மருத்துவ மனைகள், 14 கால்நடை பெரு மருத்துவமனைகள், 16 கால்நடை பன்முக மருத்துவமனைகளில் பணி யாற்றும் 3,477 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 13,968 பணியாளர்களால் மருத்துவ சேவை மற்றும் விரிவாக்க சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள கால்நடை வளர்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு கால்நடை மருத்துவ சேவைகளை இலவசமாக இத்துறை வழங்கி வருகிறது.

தமிழக கால்நடை வளர்ப்போரின் வருமானம் 41 சதவிகிதம் கால்நடை பராமரிப்பு சார்ந்து அமைகிறது. இது நாட்டிலேயே அதிகப்ப டியாக அமைகிறது.
தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளா டுகள் / செம்மறி ஆடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள், கிரா மப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதன் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதார த்தை மேம்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும் பெரும்பங் £ற்றி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை பணிகள், 4.24 கோடி எண்ணிக்கையிலான குடற்புழு நீக்க பணிகள் மற்றும் 4.20 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசி பணிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

உலக ஜுனோசிஸ் தினத்தையொட்டி திருப் பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலை யங்களில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 6117 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 3,030 கால் நடை உதவி மருத்துவர் பணியிடங்களில் 1,141 பணியிடங்கள் நீதி மன்ற வழக்குகளால் நிரப்பப் படாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட் டுதலின்பேரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் தொடர் முயற்சியால் அனைத்து சட்டசிக்கல்களும் தீர்க் கப்பட்டு நீதிமன்ற ஆணையின் மூலமாக 1,089 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக் குநர் மருத்துவர் பொன்.பாரிவேந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லட்சு மணன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பொது மேலாளர் ஏ.பி.நடராஜன், பால்வளத்துறை துணைப் பதிவாளர் சைமன் சார் லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img