ஒமைக்ரான் கொரோனா பரவலால் உள்நாட்டு விமான பயணி களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உள்நாட்டு பயணிகள் அனைவர்க்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை அளிக்கப்படுகிறது.
உலக அளவில் ஒமைக் ரான் தொற்று வேகமாக பரவி வருவதனால் இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுதப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன் படி தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து செயல்படும் என்றும் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பய ணிகளையும் ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல தமிழகத் தில் உள்ள விமான நிலையங்களுக்கு பிற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரக்கூடிய உள்நாட்டு பயணிகளையும் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடவும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல பிற மாநில மற்றும் யூனியன் பிரதே சங்களில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு வரக்கூ டியவர்கள் கட்டாயமாக இ-பதிவு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே போல கேரளாவில் இருந்து சென்னை, கோவை போன்ற விமான நிலையங்களுக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அல்லது 72 மணி நேரத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் கோவை, சென்னைக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்று சான்று வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதனால் பன்னாட்டு விமான நிலையங்கள் மட்டு மில்லாமல் உள்நாட்டு விமான நிலையங்களிலும் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக பல்வேறு புதிய நெறிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.



