fbpx
Homeபிற செய்திகள்டேக்ஸ் சேவர் பண்ட் சாம்கோ அறிமுகம்

டேக்ஸ் சேவர் பண்ட் சாம்கோ அறிமுகம்

சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் என்பது, சொத்து உருவாக்கத்திற்கான ஒரு கிளாசிக் வழிமுறையான ஒரு ELSS -ல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டாயமான லாக்கிங் கால அளவுடன் திறன்மிக்க நடுத்தர மூலதனம் மற்றும் சிறிய மூலதனம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும்.

சாம்கோ அசெட் மேனேஜ் மெண்ட் பிரைவேட் லிமிடெட் தலைமை முதலீட்டு அதிகாரி உமேஷ்குமார் மேத்தா கூறியதாவது: நீங்கள் முதலீடு செய்யும் லார்ஜ்-கேப் பங்குகள், கடந்த காலத்தில் ஒரு நேரத்தில் மிட்-கேப்ஸ்களாக இருந்தவை. நடுத்தர அளவிலிருந்து பெரிய மூலதன பங்காக மாறும் உருமாற்றமானது, ஒரு முதலீட்டாளருக்கு மிகப் பெரிய அளவில் சொத்தை உரு வாக்கியிருக்கும்.

சாம்கோ ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டின் மூலம் பிரிவு 80சி-ன் கீழ் வருமான வரி சேமிப்பின் பலனை முதலீட்டாளர் பெறுமாறு ஏதுவாக்குகிறோம்; அதே நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காலஅளவிற்கு திறம்பட வளர்ந்துவரும் நடுத் தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் முதலீட்டை செய்கிறோம்.


அந்தந்த துறைகளில் தலைமைவகிக்கும் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளின் வழியாக இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றின் ஓர் அங்கமாக, ஒரு முதலீட்டாளர் உருவெடுக்க ஏது வாக்குவதே இத்திட்டத்தின் பின் புல நோக்கமாகும்.

வரலாற்று ரீதியாக, 3 ஆண்டுகள் சராசரி ரோலிங் ரிட்டன் அடிப்படையில் நிஃப்டி 500 TRI உடன் ஒப்பிடுகையில், நிஃப்டி மிட்ஸ்மால்கேப் 400 TRI 8% என்ற ஆதாயலப்பலனை உருவாக்கியிருக்கிறது.

3 ஆண்டுகள் லாக்-இன் என்ற அம்சத்துடன் நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறு வனங்களில் செய்யப்படும் பங்கு முதலீடு, இடரை சரிகட்டி, அதிக ஆதாயத்தை உருவாக்குகின்ற வலுவான கலவை செயல்பாடாக இருக்கும் என்றார்.

சாம்கோ குழுமத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.அனந்த ராமன் கூறியதாவது: சில்லரை முதலீட்டாளர்கள் திறனதிகாரம் பெறுவதற்கு சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு, தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

நன்கு செயல்படக்கூடிய புத்தாக்கமான திட்டங்களை உருவாக்கி வழங்குவது என்ற சாம்கோவின் குறிக் கோளுக்கு இணக்கமான ELSS ஃபண்டு, அதிக சாத்தியத்திறன் கொண்ட நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களில் பிரதானமாக முதலீட்டை மேற்கொள்ளும் என்றார்

படிக்க வேண்டும்

spot_img