நீலகிரி மாவட்டம் குன்னூர் நெடுகல் கொம்பை ஆதிவாசி கிராமத்தில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி சார்பில் ஒருவாரகால நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெடுகல் ஆதிவாசி கிராம தலைவர் பலராமன் பள்ளி முதல்வர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நெடுகல் கொம்பை ஆதிவாசி கிராமத்தில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவ மாணவிகள் 50 பேர் முழு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சச்சின்போன்ஸ்லே அறிவுரைப்படி தொட்டபெட்டா பகு தியில் உள்ள வனப்பகுதி மற்றும் சாலை ஓரங்களில் இருந்த மது பாட்டில் கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர் இந்த நிகழ்ச்சியை தொட்டபெட்டா வன அலுவலர் ஜாவித்அக்தர் தொடங்கி வைத் தார்.
உதகை தலைகுந்தா மற்றும் பைன் பாரஸ்ட் பகுதியில் வனப்பகுதி மற்றும் சாலை ஓரங்களில் இருந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தலைகுந்தா வனவர் ஸ்ரீராம் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து அவலாஞ்சி வனப்பகுதிகளிலும் மாணவ, மாணவிகள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
ஜெ.எஸ்.எஸ் கல்லூரி சார்பில் ஒருவார நாட்டு நலப்பணி திட்டம் பணிகளை நாட்டு நலப்பணி அலுவலர்கள் முனைவர் செந்தில், முனைவர் பாபு ஆகியோர் ஒருங்கிணைந்து செய்தனர்.