fbpx
Homeபிற செய்திகள்ஜனவரி 8-ம் தேதி ‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023’

ஜனவரி 8-ம் தேதி ‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023’

சென்னையைச் சேர்ந்த உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் – Freshworks Inc. (NASDAQ: FRSH, சென்னை மாரத்தான் நிகழ்விற்கு அதிகாரப்பூர்வ டைட்டில் ஸ்பான்சராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சென்னை ரன்னர்ஸ் தெரிவித்துள்ளது.

சென்னை மாரத்தான் நிகழ்வு இப்போது ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023 – பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் என அழைக்கப்படும். இந்த மாபெரும் நிகழ்வு வரும் ஜனவரி 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வு, சர்க்கரை நோய் என அழைக்கப்படும் நீரிழிவின் மீது மக்களது விழிப் புணர்வை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கிறது.

நீரிழிவுக்கு மருந்தான இன்சுலின் கண்டுபிடி க்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அதனையும் மற்றும் வகை 1 நீரிழிவு இருப்பினும் மனவுறுதியோடும், தைரியத்தோடும் ஓட்டச் செயல்பாட்டில் பங்கேற்கும் வீரர்களை கொண்டாடும் இந்த மாரத்தான், இன்சுலின் தேவைகள் உள்ள குழந்தை களுக்கு நிதியினை திரட்டி வழங்குவதை நோக்கமாக கொண்டிரு க்கிறது.

சென்னை ரன்னர்ஸ் அமைப்பின் வகை 1 நீரிழிவு தூதரான ஸ்ரீதர் ராஜ்மோகன், நீரிழிவு நிலையுள்ள இன்னும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள், ஓட்டம், நடைபயிற்சி உட்பட உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத் தோடு ஈடுபட அவர்களுக்கு உத்வேகமளிக்க தீவிரமாக பாடுபட்டு வருகிறார்.

“தென்னிந்தியாவில் மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வோடு இணைந்து, அதன் டைட்டில் ஸ்பான் சராக இருப்பதில் பெரு மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டிருக்கிறோம்” என்று ஃபிரெஷ்ஒர்க்ஸ் நிறுவன த்தின் தலைமை மனிதவ ளத்துறை அதிகாரி சுமன் கோபாலன் கூறினார்.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023-பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் – ன் ரேஸ் இயக்குனர் வி.பி. செந்தில் குமார் கூறியதாவது: இம்மாரத்தான் இப்போது பதினோறாவது ஆண்டாக நடைபெறப் போகிறது.

இந்நாட்டில் ஓட்ட நிகழ்வுகளுக்கான தரஅளவு கோலை சென்னை மாரத்தான் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டு நிகழ்வுகளுள் ஒன்றாக இந்த மாரத்தான் இப்போது கருதப்படுகிறது என்றார்.

காவல்துறை தலைமை இயக்குனர் – IWCID மற்றும் எழுத்துப் படைப்பாளியான டாக்டர் கே. ஜெயந்த் முரளி பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாகவே சென்னை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறேன்.

இதில் பங்கேற்று ஓடுகின்ற வீரரின் கண்ணோ ட்டத்திலிருந்து பார்த்து அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதில் சென்னை ரன்னர்ஸ் காட்டும் சிறப் பான கூர்நோக்கமே இந்த மாரத்தான் நிகழ்வில் கலந்து கொள்ள தொடர்ந்து ஈர்த்து வருகிறது’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img