சேலம் சோனா மேலாண்மைத் துறை மாணவர் ரூ.10 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்.
சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் தியாகு வள் ளியப்பா, வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசி யதாவது:
சோனா மேலாண் மைத் துறை பல்வேறு தொழில் நிறுவ னங்களுடன் இணைந்து, மாணவர்களை தொழில் துறையில் வல்லுநர்களாக உருவாக்கி வருகிறது.
சோனா மேலாண்மைத் துறையில் மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்ட ணத்துக்கும் மேலாக அதிக வருமானத்தில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தந்துள்ளது.
இதில்அதிகபட்ச வரு மானமாக ரூ.10 லட்சம் ஆண்டு வருமானத்தில் விஷ்வபிரியா என்ற மாண விக்கு சவுத் இந்தியன் வங்கியில் பணி நியமனம் கிடைத்துள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 2021-ல் மொத்தம் 4.5 கோடி வருமானத்தில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளோம்.
2025-ம் கல்வி ஆண்டில் மொத்தம் ரூ.25 கோடி வருமானத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவது எங்கள் இலக்காக நிர்ணயித் துள் ளோம் என்றார்.
நாட்டின் தலை சிறந்த விருதான ஏஐசிடிஇ-சிஐஐ என்ற தேசிய விருதையும் இந்த ஆண்டு இந்த துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனா துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா அவரது அனுபவத்தைக் கொண்டு வேலை, தொழில் முனைவோர், குடும்ப வணிகம் என மூன்று வகையாக மாணவர்களை பிரித்து பயிற்சி அளித்து வெற்றி யாளர்களாக உருவாக்கி வருகிறார் என கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் பேசினார்.
டொயோட்டோ, வோல்வோ, ஐ,பி,எம் போன்ற நிறுவனங்களில் இருந்து முதன் மை வல்லுநர்கள் மூலம் பிரத்யேக கலந்து ரையாடலும், பயிற்சி வகுப்பும் அளிக்கப் படுகின்றன.
ஐடி துறையில் டிசிஎஸ், ஜோஹோ வங்கித் துறையில் சிட்டி யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம் என்று வேலைவாய்ப்புத் துறை பேராசிரியர் இம்மானுவேல் தெரிவித்தார்.



