Homeபிற செய்திகள்சொந்த கட்டடங்களில் நீதிமன்றங்கள் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்...

சொந்த கட்டடங்களில் நீதிமன்றங்கள் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வலியுறுத்தல்

உதகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.

அதில் அவர் பேசியதா வது: நீதித்துறைக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முழு ஒத்து ழைப்பும் வழங்கி வருகிறது. இதற்காக அர சுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதித்துறையின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளுக்கு அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என் றார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங் களிலும் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு தேவையான நிலங்கள் நீதித்துறைக்கு ஒப்படைப்பு செய்வது தொடர்பாக நிலுவை இனங்களை நீதியரசர் ஆய்வு செய்தார்.

நீதியரசர்கள் என்.சதீஷ் குமார், வி.பவானி சுப்ப ராயன், மாவட்ட நீதிபதி பி.முருகன், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் ஆர்.ஸ்ரீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷிஸ்ராவத், தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் இரவீந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img