Homeபிற செய்திகள்சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு: அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி...

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு: அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி பங்கேற்பு

சேலம், ஆக.22
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி, மாணவர் பேரவை அலுவலர்களின் பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள் கே.என். நேரு, சக்கரபாணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
சேலத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி யின் நடப்பு கல்வி ஆண்டின் மாணவர் பேரவை அலுவலக பொறுப்பாளர்களின் பதவி யேற்பு விழா நடந்தது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச் சர் சக்கரபாணி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான வழக் கறிஞர் இராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் பாரா ளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் திருவேணி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கார்த் திகேயன், இயக்குனர் பிரே மலதா கார்த்திகேயன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
2021-22-ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேட யங்கள், சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.

செந்தில் குழுமத் தலைவர் செந்தில், கந்த சாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தீப்தி தனசேகர், தலைமை நிர்வாக அதிகாரி முனை வர் சுந்தரேசன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் முனைவர் மனோகரன், துணை முதல்வர் நளினி, செந்தில் பப்ளிக் பள்ளியின் அனைத்து கல்வி ஒருங் கிணைப்பாளர்கள், ஆசி ரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img