fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் 150 ஏக்கரில் டெக்ஸ்டைல் பூங்கா ரூ.500 கோடி திட்டம் தயாராகி வருகிறது- கோவையில் அமைச்சர்...

சேலத்தில் 150 ஏக்கரில் டெக்ஸ்டைல் பூங்கா ரூ.500 கோடி திட்டம் தயாராகி வருகிறது- கோவையில் அமைச்சர் எம்.ஆர்.காந்தி பேட்டி

பல்வேறு ஜவுளி மற்றும் பின்னலாடை அமைப்புகள் சார்பில் கோவை தென்னிந்திய பின்னலாடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ‘60வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு’ நேற்று நடைபெற்றது.


இந்நிகழ்வில், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில், ஜவுளி மற்றும் பின்னலாடைத்துறையின் வளர்ச்சி குறித்த அம்சங்கள் தொழில்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், அமைச்சர் எம்.ஆர்.காந்தி பேசும்போது, தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி உற் பத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், ஜவுளி துறையில் அதிக அளவு வேலை வாய்ப்பு உரு வாகியுள்ளதாக கூறினார்

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களில் ஜவு ளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் குறித்து பின்னலாடை உற்பத்தி யாளர்களிடம் கேட்டால் அவர் களே கூறுவார்கள்.

ஆட்சி பொறுப்பேற்ற பின் பின்னலாடை நிறுவனத்தாரிடம் அவர்களது குறைகள் கேட்டறியப் பட்டது. பிரதான குறையாக செஸ் வரியை முன் வைத்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் அது ரத்து செய்யப்பட்டது.

ஜவுளி, நெசவு மற்றும் கூட்டுற வுக்கென ஒரே ஆணையர் இருந்த நிலையில் ஜவுளித்துறைக்கென என முதல்முறையாக தனி ஆணையர் நியமிக்கப்பட்டு ஜவுளித்துறை அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அத்துறை மேம்படுத் தப்பட்டு வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியில் மினி டெக்ஸ்டைல் எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சிறிய மில் யூனிட்டுகள் அமைப்பதற்கான திட்டம் அது.

ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்த மானிய தொகையை சாலை அமைப்பதற்காக மட்டுமே பயன்ப டுத்த வேண்டும் என வலியு றுத்தப்பட்டதால் இத்திட்டத்திற்கு பெருமளவு வரவேற்பு இல்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் குறித்து நாங்கள் விசா ரணை நடத்தி ஆய்வு செய்ததில், மானிய தொகையை கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பதாரர்கள் குறித்து ஆய்வு செய்து திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும் தமிழக முதல்வர் சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா அறிவித்து 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 500 கோடி மதிப்பிலான திட்டம் தயாராகி வருகிறது.
இந்தியாவில் தற்போது ஜவுளி துறையில் குஜராத்திற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் தமிழகம் உள்ளது.

ஜவுளித்துறை மட்டுமின்றி அனைத்து துறை மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஜவுளி உற்பத்திக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

ஜவுளி பயன்பாட்டிற்கான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பருத்திக்கான 11 சத வீத இறக்குமதி வரி தமிழக அரசின் வலியுறுத்தலின்படி நவம்பர் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதைச் செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img