fbpx
Homeபிற செய்திகள்சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது பிளெக்ஸ்

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது பிளெக்ஸ்

ஃப்ளெக்ஸ் (NASDAQ: FLEX) ‘ஃப்ளெக்ஸ் கிவ்விங் வீக்’ இன் ஒரு பகுதியாக, மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சமீபத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

வாலாஜாபாத் மாவட்டம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வடசென்னை பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருப்பவர்களுக்கு வெள்ள நிவாரண சமூக நலன் புரிதிட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் முககவசங்களை ஃப்ளெக்ஸ் வழங்கியது.

“ஃப்ளெக்ஸ்-ல், எங்கள் சமூகங்களை ஆதரிப்பதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமூகங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்குப் பங்களிப்பதே எங்களின் முயற்சியாகும், நாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது அதைத் தொடர்ந்து செய்வோம்” என ஃப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த எச்ஆர்இயக்குனர் சாண்ட்ரா ஆண்ட்ரூஸ் கூறினார்.

ஃப்ளெக்ஸ் வசதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களின் நலனுக்காக ஃப்ளெக்ஸ் ஆண்டு தோறும் ‘ஃப்ளெக்ஸ் கிவ்விங் வீக்’ மூலம் பல்வேறு செயல்பாடுகளை நடத்துகிறது.
ஃப்ளெக்ஸ் இன் 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நன்கொடை முயற்சியில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img