Homeபிற செய்திகள்சூலூர் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவ விழா

சூலூர் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவ விழா

கோவை மாவட்டம், சூலூர் சிந்தாமணி புதூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (மே 27) திருவிழா நிறைவடைகிறது.

சிறப்பு நிகழ்ச்சிகளாக பூச்சாட்டுதல், பொறி போடுதல், கம்பம் நடுதல், தீர்த்தம் கொண்டு வருதல், அம்மன் உடமை எடுத்து வருதல், அம்மன் அலங்கார தரிசனம், உச்சிகால பொங்கல் பூஜை, மா விளக்கு, பூவோடு அம்மன் கோவில் வந்து அடைதல், மஞ்சள் நீர், அக்னி அபிஷேகம், அம்மன் திருவீதி உலா பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன மற்றும் 9 நாட்களாக தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி, தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் அங்கமுத்து, பள்ளபாளையம் நகரச்செயலாளர் வி.கே.சண்முகம், கண்ணம்பாளையம் நகரச் செயலாளர் சிவக்குமார், பள்ளபாளையம் பேரூராட்சி 4 வார்டு அதிமுக கவுன்சிலர் கே.ஆர்.ரமேஷ், கண்ணம்பாளையம் பேரூராட்சி 1வது வார்டு அதிமுக கவுன்சிலர் எம்.செல்வராஜ், பாரதிபுரம் குமார், கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் யான் சக்திவேல், ராஜேந்திரன், பாலு கனகராஜ், அருண்குமார், விக்கி,மூர்த்தி, அருண்,வடிவேல், பிரேம்குமார், மகாராஜா, நவீன், ஆறுமுகம், ரமேஷ், ராஜேஷ், பிரகாஷ்,லோகேஷ், சதீஷ்குமார், சரவணன்,கோகுல், சந்துரு, தரணிஷ் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img