Homeபிற செய்திகள்சூலூரில் கிரேட்டர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு- ஏழைகளுக்கு நலஉதவி வழங்கினர்

சூலூரில் கிரேட்டர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு- ஏழைகளுக்கு நலஉதவி வழங்கினர்

பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு 324 சி மாவட்டத்தின் கிரேட்டர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர் வாகிகள் பதவி ஏற்பு விழா, 75 வது சுதந்திர தின பவள விழா, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சூலூரில் நடைபெற்றது.

கிரேட்டர் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதிய தலைவராக இளமுருகு, செயலாளராக இன்ஜினியர் குமரேசன், செயல் செயலாளராக, முருகேசன், நிர்வாக பொருளாளராக சுப்பிரமணியம், திட்ட பொருளாளராக கணேஷ் குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர்.

பிஎம்ஜேஎப் ஆர்.என்.கருணாநிதி புதிய நிர்வாகி களுக்கு பத வி பிரமாணம் செய்து வைத் தார். புதிய உறுப்பினர்களை சூலூர் கோல்டன் சிட்டி அரிமா சங்கத்தின் பட்ட ய தலைவர் சுந்தர்ராஜன் இணைத்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக மாவ ட்ட ஆளுநர் ராம்குமார், துணை ஆளு நர் ஜெயசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சேவை திட்டங்களை சூலூர் அரிமா சங்கத்தின் அறக்கட்டளை நிர்வாக தலைவர் த.மன்னவன், முத்து மருத்துவமனை நிறுவனர் டாக்டர் முத்து சரவணகுமார், மண்டல தலைவர் அனீஸ்குமார் ,வட்டாரத் தலைவர் மணிவண்ணன் , சிறுவர் பூங்கா மாவட்ட தலை வர் பசு நிழல் விஜயகுமார், அமைச் சரவை துணைச் செயலாளர் சிவக்குமார், ஜிஎஸ்டி உறுப்பினர் முரு கேசன் ,உரம் கௌதம் , கார்த்திக்ராஜா, செந்தில் குமார் ஆகியோர் சேவை திட்டங்களை துவக்கி வைத்தனர்.

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, சூலூர் பேரூராட்சி த¬ லவர் தேவிமன்னவன், பள்ளபாளையம் பேரூ ராட்சித் தலைவர் செல்வ ராஜ், கிரேட்டர் லயன்ஸ் சங்கத்தின் பட்டய தலைவர், ரத்த தான முகாம் மாவட்ட தலைவர் தர்ம ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கண்தான சேவைக்கு உறுதுணையாக இருக் கும் அரவிந்த் கண் மருத்துவமனை கார்த்தி, ரத்ததான சேவை புரிந்து வரும் சாந்தி சோஷியல் சர்வீஸ் ரத்த வங்கி சுரேஷ் பாபு, தோல் மற்றும் உறுப்பு தான சேவையில் சிறப்பாக செயல் படும் கங்கா மருத்துவமனை அசோக்குமார் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

சேவை திட்டமாக முத்தூட் மருத்துவ மனை யுடன் இணைந்து சூலூர் பேருந்து நிலையத் தில் பயணிகளின் பயன் பாட்டுக்காக சுத்தி கரிக்கப் பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பொருத்தப் பட்டது ஏழை மகளின் திருமண உதவியாக ரூப £ய் 35,000 நன்கொடை வழங்கப் பட்டது.

மருத்துவச்செலவுக்காக தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பள்ளி கட்டட நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயை இன்ஜினியர் குமரேசன் வழங்கினார். இறுதியாக பொருளாளர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img