கோவை மாநகர காங் கிரஸ் கட்சி சார்பாக கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக் குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள், கோவை மாந கராட்சி ஆணையரை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக மயூரா ஜெயக்குமார் கூறியதாவது: சூயஸ் வாட்டர் டெக்னாலஜிஸ் – சொல்யூஷன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தோம்
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை ஜீவாதாரம். அது தனியார் மயமாக் கப்பட்டால் பணக் காரர்களுக்கு மட்டும் தான் போய் சேருமே தவிர அடித்தள மக்களுக்கு போய் சேராது. ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அதற்கு குடிநீர் அத்தியாவசியத் தேவை, அதை வணிகமயம் ஆக்குவது தவறு.
கோவை மாநகராட்சி சட்டம் 1981 படி அனைத்து ஒப்பந்தங்களும் மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் சூயஸ் ஒப்பந்தம் போடப்பட்டபோது மன் றமே இல்லாத காலம் என்பதால் இந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது.
இந்த ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட போது, எதிர்க் கட்சிகளும் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்களும் எதிர்த்து போராட்ட களத்தில் குதித்தனர்.
அரசியல் சாசன சட்டம் ‘19’ பிரிவு ‘1’ உட்பிரிவு ‘அ’ படி போராடுவது நமது அரசி யல் உரிமை, ஆனால் மாநகராட்சி ஏதோ சூயஸ் கம்பெனியின் சகோ தர கம்பெனி போல் போராட்டக்காரர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகமே அதிகாரி மூலம் காவல்துறையில் புகார் அளித்து சமூக வலைத் தளங்களில் ஒப்பந்தத்திற்கு எதிராக பதிவேற்றம் செய்த வர்களை முடக்க திட்டம் தீட்டியது.
இதை வைத்து பார்க் கும் பொழுது இவ்வளவு கரிசனம் எதற்காக ஒரு அயல்நாட்டு கம்பெனி மீது மாநகராட்சி காட்ட வேண்டும், இத்தனை ஆண் டுகளுக்கு ஒப்பந்தம் போட வேண்டும், மாநகராட்சி மன்றம் இல்லாத சூழ்நிலையில் எதற்காக இந்த சட்டமீறல் என்று சிந்தித்தால் நிச்சயம் பல கோடி ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது,
சராசரியாக ஒரு ஒப்பந் தம் என்பது தனியாருடன் ஏற்படுத்தினால் அவை 10 ஆண்டுகளுக்கு குறை வாக இருப்பது நல்லது.
அதை விடுத்து இந்த ஒப்பந்தமானது 26 ஆண்டுகள், ஒரு சந்ததியை அடக்கும் அளவுக்கு இவ்வளவு நீண்ட கால ஒப்பந்தம் மிகப் பெரிய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
எப்படி தனியார் செல்போன் நிறுவனங்கள் குறித்த தேதியில் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பை எப்படி துண்டிக்கிறார்களோ? அது போல குடிநீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டால் குறித்த தேதியில் கட்டணம் செலுத்த முடியாவிட்டால் இணைப்பை துடிப்பார்கள்.
இதனால் ஏழை கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
குடிநீர் என்பது மனி தனின் அடிப்படைத் தேவை அது துண்டிக்கப்பட்டால் மக்களின் நிலை என்னாவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இக்கருத்துக்கள் மாநகராட்சி ஆணையருக்கு விளக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



