Homeபிற செய்திகள்சுய தொழில் துவங்க கடனுதவி 24 திட்டங்களுக்கு ரூ.237 லட்சம் மானியம்- கோவை ஆட்சியர் அழைப்பு

சுய தொழில் துவங்க கடனுதவி 24 திட்டங்களுக்கு ரூ.237 லட்சம் மானியம்- கோவை ஆட்சியர் அழைப்பு

புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொழில் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்க, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத் துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மாவட்ட தொ ழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 2022-2023-ம் நிதியாண்டில் சுய தொழில் துவங்க, கோவை மாவட்டத்திற்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 24 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ.237 இலட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்: பன்னிரண் டாம் வகுப்பு, பட்டம், பட்டயம், ஐடிஐ/ அங் கீகரிக்கப்பட்ட நிறுவனத் தின் மூலம் தொழில்சார் பயிற்சி முடித்தவர்கள். 21 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.

முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 35 மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 45 இருக்க வேண் டும்.

சிறப்புப்பிரிவில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தகுதியானவர் கள். தமிழ்நாட்டில் வசிப் பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண் ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் இயந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை வழங்கப்படும்.

பட்டியலினத்தவர்கள்/ பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 சதவிகித மானியம் கூடுதலாக வழங்கப்படும். மேலும் 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும்.

www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

ஆகவே தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img