நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியின் 51 வது வார்டில் அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகத்தின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் சால மோன் மேரி போட்டியிடுகிறார்.
தனது பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவர் மிக்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பிரசாரத்தின்போது, பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க பாடு படுவேன் என்று சாலமோன் மேரி வலியுறுத்தினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும், அரசு ஆதரவுடன் உதவி மையங்களை கொண்டு வருவேன் என்றும் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தீர்வுகள், பெண்களின் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்வகையில நான் பணியாற்றுவேன் என்றும் அவர் மேலும் கூறினார்.
தனது வார்டில் அரசு நிதியுதவியுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்களை நிறுவுவேன் என்றும் உறுதி அளித்தார். இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் சாலமோன் மேரி ஈடுபட்டார்.



