Homeபிற செய்திகள்சிலம்பத்தில் அசத்திய சேலம் மாவட்ட வீரர்கள்

சிலம்பத்தில் அசத்திய சேலம் மாவட்ட வீரர்கள்

சேலம் மாவட்டம் பழையூர் அய்யம்பெருமாள் பட்டி கிராமம் பகுதியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பாக பாராட்டு விழா நடந்தது.

இச்சங்கம் சார்பாக சென்னை ராமாபுரம் தோட்டம் எம்.ஜி.ஆர். இல்லத்தில், மாநில அளவிலான சிலம்ப விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

தமிழகம் முழுவதிலும் இருந்து, போட்டியில் 35-க்கும் மேற்பட்ட மாவட்ட வீரர்கள் பங்கேற்றன.

இதில் சேலம் மாவட்டம் சார்பாக பழையூர் அய்யம்பெருமாள் பட்டி கிராமம் சார்பாக 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேலம் மாவட்ட சிலம்பம் விளையாட்டு தலைவர் ஆசான் ஆர்.கண்ணன் தலைமையில் கலந்து கொண்டு 12 தங்கம்,11 வெள்ளி, 7 வெண்கலம் ஆகியவற்றை வென்று சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

சேலம் மாவட்டம் சார்பாக வெற்றி பெற்ற சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு ஊராட்சிமன்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் கிராம மக்கள் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கண்ணன், மகேஸ்வரன், வடிவேல், மச்சி மன்னன், சிலம்ப ஆசான்கள் மகாலிங்கம், விஷ்ணு, பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள், குழந்தைகள், வெற்றி பெற்றவர்களின் தாய், தந்தைகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img