fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் உலக பார்வை தின விழா

சிதம்பரத்தில் உலக பார்வை தின விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவில் உலக பார்வை தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் திருப்பதி துணை முதல்வர் சசிகலா, மருத்துவ கண்காணிப் பாளர் லாவண்யா குமாரி, சிண்டிகேட் உறுப்பினர் பாலாஜி, கண் மருத்துவத்துறை தலைவர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூத்த பேராசிரியர் கண் மருத்துவர் வாசுதேவன், நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய கண் பாதிப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

பிற துறைத் தலைவரும் செவிலியர்களும் கலந்து கொண்டனர். சிதம்பரம் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த தீபக் மற்றும் கேசவன் கண் தானத்தின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img