fbpx
Homeபிற செய்திகள்சிக்னலை மதிக்காத கோவை வாகன ஓட்டிகளால் சிக்கல்

சிக்னலை மதிக்காத கோவை வாகன ஓட்டிகளால் சிக்கல்

கோவைப்புதூர் பிரிவில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராக கோவை மாநகரம் உள்ளது. கோவை தொழில் நகரம் என்பதைக் கடந்து இங்கு பிரபல பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கோவையில் தங்கி படித்து வருகின்றனர்.


இதுபோக ஏராளமான ‘ஐ.டி’ நிறுவனங்களும் கோவையில் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாநகர போலீசார் தொடர்ந்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிக்னல்களில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து விதிகளை மீறுபவர் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவைப்புதூர் பிரிவு போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வதால் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

கோவைப்புதூர் பிரிவில் இருந்து கோவைப்புதூர் மற்றும் தொண்டாமுத்தூர், பாலக்காடு, உக்கடம் என்று கோவையின் மூன்று திசைகளுக்கும் செல்வதற்கான சாலைகள் உள்ளது. மேலும் இந்த சிக்னலுக்கு அருகிலேயே கல்லூரிகளும் உள்ளன.

இப்படிப்பட்ட இடத்தில் உள்ள சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வது விபத்துக்கு வழிவகுக்கும் நிலையில் உள்ளது.

இந்த போக்குவரத்து சிக்னலில் கண்காணிப்பு காமரா பொருத்தப்படவில்லை. இதனிடையே கண்காணிப்பு காமரா பொருத்தப்படுவதோடு, போக்குவரத்து போலீசார் காலையிலும் மாலையிலும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img