ஹெச்சிஎல் 11.2பில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய கூட்டு நிறுவனமானது, இந்தியாவின் முதன்மை யான விமர்சன ரீதியான தளமான ஹெச்சிஎல் ஜிக்சாவின் மூன்றாவது பதிப்பிற்கான பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.
விர்ச்சுவல், பான்- இந்தியா திட்டம், பல அடுக்கு மதிப்பீட்டு செயல்முறை மூலம் இந்தி யாவின் சிறந்த இளம் பிரச்சனைகளை தீர்ப் பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்குவதன் மூலம் இளம் சிக்கல்களை தீர்ப்பவர்களின் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஹெச்சிஎல் ஜிக்சா 6 முதல் 9 -ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடம் ஆராய்ச்சி, விமர்சன சிந் தனை மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட 21-ம் நூற்றாண்டின் முக்கிய திறன்களை மதிப்பிடுகிறது.
நிஜ உலக சவால்களை தீர்க்க இவற்றைப் பயன் படுத்த அவர்களுக்கு உதவுகிறது.
போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது பள்ளிகள் ஷ்ஷ்ஷ்.லீநீறீழீவீரீsணீஷ்.நீஷீனீ -ல், ஜூலை 31, 2022-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
ஹெச்சிஎல் ஜிக்சா 3.0க்கான மொத்த பரிசுத் தொகை ரூ.12 லட்சம். வெற்றியாளர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்கள் ஹெச்சிஎல் இன்ஜினியரிங் மற்றும் நவீன ஆய்வகத்தில் கற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த முயற்சி குறித்து ஹெச்சிஎல் கார்ப்பரேஷனின் வியூக தலைவர் சுந்தர் மகாலிங்கம் கூறுகையில், “ஹெச்சிஎல்லில், ஒரு தனிநபரின் திறனை மட்டு மல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் திறனையும் பெருக்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
வேகமாக வளரும் உலகில் இளம் மனங்கள் செழிக்க உதவுவதற்கு விம ர்சன -சிந்தனை திறன்களை வளர்ப்பது அவசியம்.
இந்த பயணத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள் ளிகள் முக்கிய பங்கு வகிக் கின்றன.
ஜிக்சா 3.0 நிஜ உலக வழக்கு ஆய்வுகளை முன் வைத்து, உற்சாகமான வெகுமதிகளை பெற புதுமையான தீர்வுகளை கொண்டு வர பங்கேற்பா ளர்களை ஊக்குவிக்கும்.
ஹெச்சிஎல் ஜிக்சா, மூன்று முதன்மை பண் புக்கூறுகளின் கீழ் 10 அளவுருக்களில் பங்கேற் கும் மாணவர்களை மதிப்பிடும். அவை சிக்கலை தீர்க்கும் செயல்முறையின் முக்கிய கூறுகளாக வகைப் படுத்தப்படும்.
இறுதி சுற்று – வழக்கு ஆய்வு சுற்று, ஆகஸ்ட் 22, 2022 அன்று நடைபெறும். இந்த கட்டத்தில் ஒரு தரத் திற்கு 9 மாணவர்கள் போட்டியிடுவார்கள்.



