fbpx
Homeபிற செய்திகள்சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துகளை தடுக்கலாம்-கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேச்சு

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துகளை தடுக்கலாம்-கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேச்சு

வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை முறை யாக பின்பற்றினாலே விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும் என்று கோவை மாவட்ட ஆட்சி யர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்.27) சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி பேசியதாவது:

சாலைப் பாதுகாப்பு விதிமுறை கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடவும், வாகன ஓட்டிகளுக்கு தரமான சாலை போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தி டவும், அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் உரிய எச்சரிக்கை பலகைகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர்களுடன் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இதனை உணர்ந்து வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதை தவிர்த்திட வேண்டும்.

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட்பெல்ட் ஆகியவை கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற் றினாலே விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும்.

சாலைப் பாதுகாப்பு நடவ டிக்கைகள் குறித்து பொதுமக் களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

முதல்வர் அறிவித்துள்ள ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத் தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, சாலைப் பாதுகாப்பு சிறப்பு பணிக்குழு(Special Task Force on Road Safety) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவி னரால் அதிகமாக விபத்து நிகழும் பகுதிகளில் சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில், தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வுகளை கண்டறியவும், தற்காலிக தீர்வுகளை செயல்படுத்துவதை கண்காணிக்க வும், சாலைப் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன

வாகன விபத்து நிகழும் இடங்களில், விபத்துக்குள்ளான நபரை விபத்து நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி பெறுவதற்கு உதவி செய்யும் பொது மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் ‘நிஷீஷீபீ ‘Good Samaritan Award’ வழங்க, மத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை ஆணையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விருதிற்கு தகுதியான நபர்களின் முன்மொழிவுகள் மாவட்ட அள விலான குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப் பட்ட முன்மொழிவுகள் போக் குவரத்து ஆணையருக்கு அனுப்பப் படவுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒருங் கிணைந்து செயல்பட்டு விபத் தில்லா மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்கிட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் துணை ஆணையர்கள் (சட்டம் ஒழுங்கு) ஜெயச்சந்திரன், உமா (போக்குவரத்து) செல்வராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img