fbpx
Homeபிற செய்திகள்‘சாத்விக முறையில் அந்நியரை வெளியேற்றியவர் காந்தி’ அவினாசிலிங்கம் பல்கலை. விழாவில் முனைவர் மீனாட்சி சுந்தரம் பேச்சு

‘சாத்விக முறையில் அந்நியரை வெளியேற்றியவர் காந்தி’ அவினாசிலிங்கம் பல்கலை. விழாவில் முனைவர் மீனாட்சி சுந்தரம் பேச்சு

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவ னத்தில் மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் விழாவினை முன் னிட்டு, காந்தி ஜெயந்தி விழா இசை மாணவிகளின் பஜனையுடன் துவங்கியது. சிறப்புக் கல்வி மற்றும் கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி.மிருனாளினி வரவேற்றார்.

அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் முனைவர் எஸ்.பி. தியாகராஜன் தலைமை தாங்கிப் பேசும்போது, இந்நாட்டில் ஒரே ஒரு மனிதரை மட்டுமே மகாத்மா என்று அழைக்கிறோம்.

காந்தியடிகளின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்தும் அகிம்சைக் கொள்கைகளையும் மகாத்மா காந்தி அவினாசிலிங்கம் ஐயாவுடனான நட்பின் திண்மையையும் பற்றி குறிப்பிட்டார். அவினாசிலிங்கம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் பேசியதாவது:

காந்தியடிகள் சாத்விக முறையில் அந்நியரைவெளியேற்றியவர். பெண் கல் விக்காக பாடுபட்ட அவினாசிலிங்கம் ஐயா காந்திய வழிகளைப் பின்பற்றி சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கல்வி என்பது ஒருமனிதனை பக்குவப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

எழுத்தறிவு என்பது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதிதான் ஆனால் சமூகமே அவர்க ளுக்கு உண்மையான வாழ்வியல் உண்மையை கற்றுக் கொடுக்கும் என்று காந்தியடிகள் கூறியுள்ளார் என்றார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் மற்றும் அவினா சிலிங்கம் அறக்கட்டளையின் வாழ் நாள் அறங்காவலர் முனைவர் கே.குழந்தைவேல் பேசுகையில், சாதாரண மனிதனாக எளிமை யானவராக இருந்த காந்தியடிகள் தென்னாப்பிரிக்க மக்களுக்கு விடுதலை கிடைக்க அந்நியரை எதிர்த்து போராடி யவர்.

விவசாயப் போராட்டம், தொழி லாளர் போராட்டம், விடுதலைப் போராட்டம் என்று தம் வாழ்வை போராட்டத்திற்காகவே அர்ப்பணித்தவர். அவினாசிலிங்கம் ஐயா காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி சாரதாலயம் என்னும் பெண்கல்வி நிறுவனத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பயிலும் வண்ணமாக ஏற்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் எஸ்.கௌசல்யா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத் தினார்.

சிறப்பு விருந்தினர் கோவை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளரான எம்.உமா மகே ஸ்வரி பேசியதாவது: காந்தியடிகள் இயந்திரமயமான இந்தியாவைக் காண விரும்பவில்லை.

ஏழைகள் இல்லாத இந்தியாவைக் காண விழைகிறேன் என்றார்.
காந்தியடிகள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனும் வேற்றுமையை வெறுக்கிறேன்.

மதம், இனம், மொழி எனும்அனைத்திலும் வேற்றுமையில் ஓற்றுமைக் கண்டு, குண்டடிபட்டு இறக்கின்ற போதும் சம தர்மத்தையே நிலை நாட்டியவர்.

கிராமம் தான் இந்தியாவின் ஆன்மா என்பதனை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் உள்ள ஏழைகளுக்குக் கதராடைக் கொடுத்த 20-ம் நூற்றாண்டின் மா பெரும் மனிதர்.

தமது வாழ்வில் தமக்கு அகிம்சையைக் கற்றுக் கொடுத்தவர் தனது மனைவி கஸ்தூரிபாய் என்று சுயசரிதையில் நெகிழ்ச்சியுடன் எழுதியவர்.

காந்தியடிகள் கதராடையை அரையா டையாக அணிந்த நூறாவது ஆண்டு. காந்திய வழியைப் பின்பற்றி காந்திய வாதியாக வாழ்ந்த அவினாசிலிங்கம் ஐயாவின் தேசப்பணியும் கல்விப்பணியும் போற்றுதலுக்குரியது என்றார்.

காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் உறுதிமொழி வாச கத்தை வாசித்து உறுதிமொழி எடுக்கும் படி கூறினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க.கலாவதி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img