fbpx
Homeபிற செய்திகள்சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அரசு முன் வர வேண்டும் குரும்பா முன்னேற்ற சங்கம்...

சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அரசு முன் வர வேண்டும் குரும்பா முன்னேற்ற சங்கம் கோரிக்கை

சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு குரும்பா முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி கோவையில் தெரிவித்துள்ளார்..

கோவை மாவட்ட குரும்பா சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் கெம்புராஜ் மற்றும் செயல் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

சுகுணாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இதில் தமிழ் நாடு குரும்பா சங்க மாநில இளைஞரணி தலைவர் ஆர்.கே.ராஜ்குமார், நிர்வாகிகள் மயி லை செந்தில் குமார், அன்பழகன், பீடம்பள்ளி கணேஷ், புகழேந்தி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோவை மாவட்டத் தில் உள்ள 220 கிராமங்களில் குரும்பா சமுதாய மக்களின் பல் வேறு நிலை சார்ந்த புள்ளி விபரங்கள் குறித்த கணக்கெடுப்பை மாவட்ட சங்கத்தினர் எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில், கோவை மாவட்ட குரும் பா சங்க மாவட்ட தலைவராக கெம்புராஜ், செயல் தலைவராக கல்பனா வேலுச்சாமி, செயலாளராக அன்பழகன், பொருளாளராக எம்.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்களாக ஆறுமுகம், செல்வராஜ், சத்தியநாராயணன், புகழேந்தி, சின்னச்சாமி, ரத்தினசாமி, சுந்தர் ராஜன், கணேசன், செந்தில்குமார், தேவராஜ், சுந்தர்ராஜன், துணைச் செயலாளர்களாக வேலுச்சாமி, அன்பழகன், துரை சாமி, நடராஜ், சிவக்குமார் இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜ்குமார் ராஜேஷ் லட்சுமிகாந்தன் முருகேசன் கனகராஜ் மகளிரணி அமைப்பாளராக ரேணுகாதேவி, விமலா ராமசாமி, ராஜாமணி, ரங்கநாயகி செயற்குழு உறுப்பினர்களாக கடமை குணசேகரன், சம்பத், தேவராஜன், காளிமுத்து, மணி, ராயப்பன், கந்தசாமி கவுண்டர், ரங்கப்ப ராமராஜ், பூபதி, பன்னீர் செல்வம், தனுஷ் ராஜ், ஆறுச்சாமி, சிவக்குமார், சுப்பிரமணியன், சண் முகம், மயில்சாமி, தேவ ராஜ், கண்ணன், தங்க வேல், ராமச்சந்திரன், ராம்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் குரும்பா நாயனார் ஆன்மீக பேர வை தலைவர் குருவை ராமசாமி, செயலாளர் தென்றல் நாகராஜ், ஒருங்கிணைப்பாளர் வைட் அண்ட் வைட் வேலுச்சாமி, தீத்திபாளையம் புலவர் ஐயா சாமி,கேசவமூர்த்தி மற்றும் சுகுணாபுரம் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img