fbpx
Homeபிற செய்திகள்சவீதா பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தின விழா

சவீதா பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தின விழா

சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சார்பில் சவீதா பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தினம் 2022 கொண்டாடப்பட்டது.

‘கீல்வாதம் மற்றும் பிசியோதெரபியின் பங்கு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு ‘பிசியோதெரபி தினம்’ கடைபிடிக்கப்பட்டது.
மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், பிசியோதெரபியை ஊக் குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

4 நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 800-க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மப்பேடு மற்றும் திருமழிசையில் உள்ள சவீதா கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் முதுகுவலிக்கான பிசியோதெரபி முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முகாம்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வயதானவர்கள் பயன் அடைந்தனர். சவீதா பிசியோதெரபி கல்லூரியின் 30 ஆண்டு சிறப்பான பயணத்தை குறித்திடும் வகையில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பிசியோதெரபி தின நிகழ்ச்சியை சிமாட்ஸ் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் சி. சிவாஜி, பதிவாளர் டாக்டர் ஷீஜா வர்கீஸ் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

முதல்வர் டாக்டர் ஏ. ஜெகதீசன், துணை முதல் வர் டாக்டர் எஸ். பிரதாப், அமைப்புச் செயலாளர் டாக்டர்.ஏ.குமரேசன், சிறப்பு விருந்தினர் பெங் களூரு, ஸ்பெக்ட்ரம் பிசியோ பிரைவேட் லிமி டெட் நிர்வாக இயக்குனர், டாக்டர் தனஞ்ஜெயன் ஜெயவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கீல்வாத மேலாண்மை பற்றிய புதுமையான பிசியோதெரபி திட்டங்கள் உள் ளிட்ட கவிதை, ரங்கோலி, ஓவியம், மெஹந்தி, கழிவுகளிலிருந்து சிறந்தது, பென்சில் ஸ்கெட்ச், வினாடி வினா, நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் போஸ்டர் விளக்கங் களுடன் அறிவியல் அமர்வு ஆகியவை நடைபெற்றன.

டாக்டர் தனஞ்ஜெயன், கீல்வாதத்தில் பிசியோ தெரபியின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.
சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், இயக்குனர் டாக்டர் தீபக் நல்லசுவாமி ஆகி யோர் பிசியோதெரபி நிபுணர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img