கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ. 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு துவங்கி வைத்தார். மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வரவேற்புரை ஆற்றினார்.
முன்னதாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வாலாங்குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி வரைபடத்தை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா விளக்கி கூறினார்.
மேலும், இந்த ஆய்வின்போது நீர்வழிப் பாதை களை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து ஆடிஸ் வீதியில் ரூ2.50 கோடி மதிப்பீட்டில் நூலக அறிவுசார் மைய கட்டிட பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்த னர். தொடர்ந்து வடவள்ளி ரேவதி நகரில் 24 மணி நேர குடி நீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பின்னர் மாநகராட்சி வளாகத் தில் புகைப்பட கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டு மாநகராட்சியின் ஓராண்டு கால சாதனை மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக அமைச்சர்கள் அடிக்கல் நட்டினர்.
இந்த நிகழ்ச்சி களில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்பி சண் முகசுந்தரம், துணைமேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையர் சர்மிளா, திமுக மாவட்ட பொறுப் பாளர் நா.கார்த்திக், மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.



