fbpx
Homeபிற செய்திகள்கோவை வடக்கு மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை வடக்கு மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று (செப்.15) ஆய்வு மேற் கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், துடியலூர் முதல் சரவணம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டுவரும் நீருந்து நிலை யத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி, வெள்ளக்கிணறு வார்டு எண்.26, 42, 43 ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் விநியோகம் மற்றும் குறைபாடுகள், மாநகராட்சிக்கு பெறப் படும் குடிநீர் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர், துடியலூரில் அமைந் துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என ஆணையாளர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img