fbpx
Homeபிற செய்திகள்கோவை ரோட்டரி மாவட்ட ஆளுநராக மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு பொறுப்பேற்றார்

கோவை ரோட்டரி மாவட்ட ஆளுநராக மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு பொறுப்பேற்றார்

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவர் மூத்த வழக்கறிஞர் என்.சுந்தரவடிவேலு கோவை ரோட்டரி மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றார்.

பன்னாட்டு ரோட்டரி சங்கம் என்னும் பன்னாட்டு சுழற் சங்கம் சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும் அதன் கோவை மாவட்ட ஆளுநராக மூத்த வழக்கறிஞர் என்.சுந்தரவடிவேலு பொறுப்பேற்றார். அனைத்து தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் கடந்த 38 வருடங்களாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.
ஹுயூமன் ரைட்ஸ் செல்லா அப், கோவை மாவட்ட பார் அசோசியேஷன் தலைவராக, ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் தலைவராக, இன்ஸ்டியூட் ஆப் லிபரல் ஸ்டெடி சீன் சேர்மனாக, டிஸ்ட்ரிக் ரோட்ராக் ரப்பர் ரெண்ட் ரெப்ரசன்டேட்டிவாக, பெரியார் யுனிவர்சிட்டி செனட் மெம்பராக, ரோட்டரி ஆர்ச் கிளப் சொசைட்டி மெம்பராக மற்றும் செய்சிஸ் இன்டர் நேஷனலில் உயர் பதவியையும் வகித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இரண்டு மாத குரூப்ஸ்டடி எக்ஸ்சேஞ்ச் டீமாக சென்று பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிக்கும் முறையை எக்ஸ்பிரிமெண்ட், புக்ஸ் மற்றும் தேர்வு எழுதும் முறை அனைத்தையும் ஆய்வு செய்துள்ளார்.

என்.சுந்தரவடிவேலுவுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவன தலைவர் ஆர்.கே.குமார்
தலைமையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் மாநில பொது செயலாளர் முனைவர்
வி.எச்.சுப்ரமணியம், செயற்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் முத்தையா, கோவை சந்திரன் மற்றும் பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img