கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். மேலும், கோவை ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே காவல் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் உண்மை நிலவரம் தெரியவில்லை என்ற போதிலும்,
ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.