கோவை மாவட்ட புதிய வருவாய் அதிகாரியாக லீலா அலெக்ஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணிபுரிந்த ராமதுரை முருகன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்த லீலா அலெக்ஸ்கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவரிடம் ராம துரைமுருகன் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய வருவாய் அதிகாரிக்கு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.