fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வளர்ச்சி நிதி

கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வளர்ச்சி நிதி

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மாவட்ட கூட் டுறவு ஒன்றியத்திற்கு 2019-2020-ம் ஆண்டில் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ.26,77,482 /- மற்றும் கூட்டுறவு கல்வி நிதி தொகை ரூ.17,84,988 /- மொத்தம் ரூ.44,62,470/- வங்கி வரைவோலையாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் அதற்கான வரைவோலையை வழங்க, கோவை மாவட்ட கூட் டுறவு ஒன்றியத் தலைவர் கே.மதுக்கரை மகாலிங்கம் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்கு நர் டாக்டர் செந்தமிழ் செல்வி, கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் நா. பாரதி மற்றும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img