கோவை மாவட்டம், பி.ஆர்.எஸ் மைதானத்தில் தனியார் பள்ளிப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சத்தியகுமார், குமாரவேல், பாலமுருகன் சிவகுருநாதன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பலர் உள்ளனர்.



