fbpx
Homeபிற செய்திகள்கோவை மத்திய மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் பூங்காக்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஆக. 27) ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் எண்.80, 83 வார்டுகளுக்கு உட்பட்ட ராஜவீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

தூய்மைப் பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். வீடுதோறும் குப்பையை சேகரிக்கும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப் பட்டுள்ள குப்பையை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும். கொசுவினால் ஏற்ப டும் நோய்களைத் தவிர்க்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்.

தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்க ளுக்காக ஒதுக்கப்பட்ட பணி களை சிறப்பாக செய்திட வேண் டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆணையாளர் தெரிவித்தார்.

வார்டு எண்.68-க்கு உட்பட்ட ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங் கள், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஆகி யவை குறித்து, பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களிடம் கேட்டறிந்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் பள்ளியின் உட்புறப் பகுதிகள் மற்றும் சுற் றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

வார்டு எண்.68-க்கு உட்பட்ட வள்ளியம்மாள் வீதியில் உள்ள மாநகராட்சி சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் மாநகராட்சிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர் பார்வதி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img