கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்றுவழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருள்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் பலர் உள்ளனர்.



