Homeபிற செய்திகள்கோவை நேரு கல்லூரியில் ‘ஏரோபிளஸ் 2022’ கண்காட்சி ஜூன் 24-ம் தேதி துவக்கம்

கோவை நேரு கல்லூரியில் ‘ஏரோபிளஸ் 2022’ கண்காட்சி ஜூன் 24-ம் தேதி துவக்கம்

கோவை நேரு காலேஜ் ஆப் ஏரோநாட் டிக்ஸ் அண்ட் அப்ளையட் சயின்சஸ் சார்பில், ‘ஏரோபிளஸ் 2022’ என்ற பெயரில், விமானக் கண் காட்சி வரும் 24-ம் தேதி முதல் 26 வரை 3 நாள் நடைபெறவுள்ளது.

இது குறித்து நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செய லாளருமான முனைவர் பி.கிருஷ்ணகுமார் கூறிய தாவது: இக்கண் காட்சி கோவை பாலக் காடு சாலையில், குனியமுத்தூ ரில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் 3 நாள் நடை பெறுகிறது.

முதல் நாள் 24 – ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் காலை 10.30 முதல் 3.30 மணி வரை அனுமதி அளிக்கப்படும். 25, 26 -ம் தேதி பொது மக்களுக்கு காலை 10 முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்படும். அனுமதி இலவசம்.

விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிப் பது அரிதான செய லாகும்.

விமானவியல் துறையில் ஆண்டுதோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை மாணவ, மாணவிகளும் பொது மக் களும் தெரிந்து கொள் ளலாம். இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 5 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் பார்வைக்காக அணிவகுக்க உள்ளன.

மெய்நிகர் காட்சி வாயிலாக ஏர்போர்ட் சுற்றிப்பார்த்தல், 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விமான நிலையம், விமான உதிரிபாகங்கள் மற்றும் எண்ணற்ற அரிய விமானங்களின் புகைப்படங்களும் இக் கண்காட்சியில் வைக்கப்ப டவுள்ளன.

விமான ஆய்வுக் கூடங்கள், விமானம் சம் பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. பார்வையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் விமா னம் மற்றும் ஹெலி காப்டர்களில் ஏறி அமர்ந்து மகிழலாம்.

குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத் துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img