fbpx
Homeபிற செய்திகள்கோவை, தருமபுரி, ஈரோடு உள்பட தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்கள்: காணொலி மூலம் திறந்தார்,...

கோவை, தருமபுரி, ஈரோடு உள்பட தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்கள்: காணொலி மூலம் திறந்தார், முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் அரசு நலத் திட்டங்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 303 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மருந்தகங்களை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, குமரி உள்ளிட்ட இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

இதே போல் திருவண் ணாமலை மாவட்டம் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த அலுவலக கட்டிடத்தை போக்குவரத்துத்துறை சார்பில் காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img